மது பாட்டில்களில் உள்ள தமிழ் வாசகம் மாற்றம்!

மதுபாட்டிலில் உள்ள ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் வந்த பிறகு மது விற்பனை மிகவும் அதிகரித்துவிட்டது. பள்ளி மாணவர்கள் எல்லாம் மது அருந்த தொடங்கிவிட்ட அவல நிலை தான் காணப்படுகிறது. விதிப்படி மது, சிகரெட் ஆகியவற்றில் எச்சரிக்கை வாசகம் எழுத வேண்டும். அதன்படி, தமிழகத்தில் கிடைக்கும் மதுபாட்டில்களில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் போன்ற எச்சரிக்கை வாசகங்கள்
 

துபாட்டிலில் உள்ள ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் வந்த பிறகு மது விற்பனை மிகவும் அதிகரித்துவிட்டது. பள்ளி மாணவர்கள் எல்லாம் மது அருந்த தொடங்கிவிட்ட அவல நிலை தான் காணப்படுகிறது.

விதிப்படி மது, சிகரெட் ஆகியவற்றில் எச்சரிக்கை வாசகம் எழுத வேண்டும். அதன்படி, தமிழகத்தில் கிடைக்கும் மதுபாட்டில்களில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த நிலையில் மது பாட்டில்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

1937ம் ஆன்டு முதல் ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகம்தான், தமிழகத்தில் மதுபான பாட்டில்கள் மீது எழுதப்பட்டு வருகிறது. முதல் முறையாக அந்த வாசகம் மாற்றப்பட உள்ளது.

மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகம் மதுபான பாட்டில்களில் இனி இடம் பெறும். வாசகத்தை மாற்றி என்ன பயன், டாஸ்மாக் கடைகளை நெறிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://www.A1TamilNews.com