5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்களை இணையத்தில் சமர்பிக்க உத்தரவு!பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியில் 5, 8, 10, 12ம் வகுப்புக்களில் படித்து வரும் மாணவர்களின் மாற்று சான்றிதழ் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசுக்கு இணையதளத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக
 

மிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியில் 5, 8, 10, 12ம் வகுப்புக்களில் படித்து வரும் மாணவர்களின் மாற்று சான்றிதழ் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசுக்கு இணையதளத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

பதிவுசெய்த பிறகு, தவறுகள் இருப்பின் மீண்டும் திருத்தம் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com