பொதுப் போக்குவரத்தின் மூலம் தமிழகத்திற்குள் 1570 கொரோனா நோயாளிகள் நுழைந்தனர்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான்காவது கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் மத்திய அரசு ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்துகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வருகிறது. இதன் படி விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களில்ன் மூலம் இதுவரை தமிழகத்திற்கு புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 99651 பேர். இதில் சர்வதேச விமானம் வழியாக 2731 பேர், உள்நாட்டு விமானத்தில் 9927 பேர்,
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நான்காவது கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் மத்திய அரசு ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்துகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வருகிறது.

இதன் படி விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களில்ன் மூலம் இதுவரை தமிழகத்திற்கு புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 99651 பேர். இதில் சர்வதேச விமானம் வழியாக 2731 பேர், உள்நாட்டு விமானத்தில் 9927 பேர், ரயில் சேவையில் 10222பேர்.

டாக்ஸி மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் 50432 பேர் , பேருந்துகள் மூலம் 26339 பேர்.
இவர்களில் இதுவரை 1570 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளிலேயே அல்லது அரசாங்க முகாம்கள், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்தத் தகவல்களை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com