அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலையில் 15 நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும், மாணவர்களை உயற்பயிற்சிகளில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவ மாணவிகளுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடச் சுமையைக் குறைத்து ஆரோக்கியத்துடன் மாணவர்கள் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம் என பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மூலம் மாணவ, மாணவிகள் மனதளவில் தனித்திறன், ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து
 

ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலையில் 15 நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும், மாணவர்களை உயற்பயிற்சிகளில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவ மாணவிகளுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடச் சுமையைக் குறைத்து ஆரோக்கியத்துடன் மாணவர்கள் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம் என பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மூலம் மாணவ, மாணவிகள் மனதளவில் தனித்திறன், ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலன் பேணப்படும் என்பதால், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பள்ளிகளில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com