ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

சர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் தடுப்பு காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமுல் படுத்தியிருக்கின்றன. 14நாட்களில் வைரஸ் அகற்றப்படுமா, மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வருமா என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப ஜூன் மாதம் ஆகும் என்று மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு மூன்று வாரங்களுக்கு மட்டுமே என்று கூறியிருந்தார்.
 

ர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் தடுப்பு காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமுல் படுத்தியிருக்கின்றன. 14நாட்களில் வைரஸ் அகற்றப்படுமா, மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வருமா என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப ஜூன் மாதம் ஆகும் என்று மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு மூன்று வாரங்களுக்கு மட்டுமே என்று கூறியிருந்தார்.

ஆனால் பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோயியல் நிபுணர் நீல் பெர்குசன், ஊரடங்கு உத்தரவு பல மாதங்கள் நீட்டிக்கப்படும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.பிரச்னை சரியாவதற்கு முன்பு நிலைமை மிகவும் மோசமாகவும் வாய்ப்புகள் அதிகம் என்று அரசு வட்டாரத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

A1TamilNews.com