தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

தஞ்சை பெரிய கோவில் திருத்தேரோட்டத்தை ஒட்டி இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை 7 மணி முதல் நான்கு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.