பிரதமர் மோடியை சந்தித்து ஏன்..? சரண்ஜித் சிங் சன்னி பதில்

 

விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கூறினார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரிந்தர்சிங் உட்கட்சி விவகாரத்தால் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக  சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். இந்நிலையில்  பிரதமர் அலுவலக இல்லம் சென்றிருந்த சரண்ஜித்சிங் சன்னி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து மோடியிடம் வலியுறுத்தியதாக, பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில்,  டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வுகாண பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று நான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமரிடம் கோரிக்கையை முன் வைத்தேன்” என்றார்.