யார் பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? சமஸ்கிருதத்தில் “நன்றி” இருக்கா? கார்த்திகேய சிவசேனாபதி சவால்!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மனுஸ்மிருதியில் பெண்கள் பற்றி கூறப்பட்டுள்ளதாக பேசியதை, பாஜக பெரிய விவகாரமாக கையில் எடுத்துள்ளது. திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ ஆவேசம் அடைந்தார்.
திருமாவளவன் பேசியதை வெட்டி ஒட்டி சமூகத்தளங்களில் பரப்பியுள்ளார்கள். மனுஸ்மிருதியில் சொன்னைதைத் தான் அவர் குறிப்பிட்டுச் சொன்னார், அவர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன் வைத்தனர். மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தலைமையில் போராட்டமும் நடந்துள்ளது.
மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டுமென்றால் திருக்குறளையும் தடை செய்ய வேண்டும். திருக்குறள் மனுஸ்மிருதியிலிருந்து பலவற்றை எடுத்துள்ளதாக அறிஞர் ஒருவர் கூறியுள்ளதாக சுமந்த் ராமன் என்ற வலது சாரி விமர்சகர் ட்வீட் செய்துள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள கார்த்திகேய சிவசேனாபதி, ”நன்றி என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தையை சமஸ்கிருதத்தில் கூறுங்கள். அதற்குப் பிறகு யார் பிள்ளைக்கு யார் பெயர் வைக்கப் பார்க்கிறார்கள் என்பது விளங்கும்,” என்று பதிலளித்துள்ளார்.
மேலும், “ யார் அந்த அறிஞர் என்று சொல்லுங்கள். அவர் அறிஞரா அல்லது சங்கியா என்று நாங்கள் சொல்லுகிறோம். அது ஏமாற்றுப் பேர்வழி நாகசாமி இல்லை என்று நம்புகிறேன்,” என்றும் கார்த்திகேயசிவசேனாபதி கூறியுள்ளார்.
A1TamilNews