அரசு, தனியார் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை -போராட்டக்களமாகும் தலைநகர்!

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டு 2மாதங்கள் கடந்த பின்னும் தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களும், கலவரங்களும், பேரணியும், உண்ணாவிரதங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும் தலை நகர் டெல்லியில் ஷாகின்பாக் என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை அடக்கும் பொருட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரத்தன்பாலா என்ற போலீஸ் அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார்
 

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டு 2மாதங்கள் கடந்த பின்னும் தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களும், கலவரங்களும், பேரணியும், உண்ணாவிரதங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும் தலை நகர் டெல்லியில் ஷாகின்பாக் என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை அடக்கும் பொருட்டு  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரத்தன்பாலா என்ற போலீஸ் அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  மூன்று உயரதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் தலைநகர் டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லி வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் டெல்லியில் அசம்பாவிதங்கள் நடப்பது மத்திய அரசிற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

http://www.A1TamilNews.com