பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் பேர்! அதிரவைக்கும் ரிப்போர்ட்

இந்தியா: 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் நாடாக கருதப்படும் இந்தியாவில், 3 ஆண்டுகளில் நடந்திருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2015ஆம்
 

இந்தியா: 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் நாடாக கருதப்படும் இந்தியாவில், 3 ஆண்டுகளில் நடந்திருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2015ஆம் முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 57 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்த மாநிலங்களின் பட்டியலில், மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 835 வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மட்டும் 6 ஆயிரத்து 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் 5 ஆயிரத்து 583 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. தென்னிந்தியாவில் தமிழகத்தை பார்த்தோம் என்றால், ஆயிரத்து 23 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் அமில வீச்சு சம்பவங்கள், 448 இடங்களில் நடந்துள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 136 வழக்குகள் பதிவாகியுள்ளன.

-வணக்கம் இந்தியா