நவம்பர் மாதம் வரை , இலவச ரேஷன் பொருட்கள் !பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொது மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அசாதாரண சூழ்நிலையில் செய்யப்படும் மிகச் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. அரசின் விதிமுறைகளை
 

ந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொது மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அசாதாரண சூழ்நிலையில் செய்யப்படும் மிகச் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.

அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதிக கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. அனைவருமே சட்டத்தின் முன் சம உரிமை உள்ளவர்களே.

நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க உறுதி மேற்கொள்ளப்படும். எளிய மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதுவரை நேரடியாக ஏழை மக்கள் வங்கி கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலுத்தப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணரும் வகையில் நவம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

A1TamilNews.com