பிரதமர் வேணாம்னு சொன்னாரே! கர்நாடகாவில் 12 நாட்கள் லாக் டவுன் அறிவித்த பாஜக அரசு!!

 

கர்நாடகா மாநிலத்தில் பாஜக முதலமைச்சர் எடியூரப்பா 12 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று ஏப்ரல் 22ம் தேதி முதல் வியாழக்கிழமை மதியம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மே 4ம் தேதி வரை நீடிக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், மருத்துவமனைகள், மெட்ரோ, பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள், ஜிம், யோகா மையங்கள், விளையாட்டு அரங்கங்கள், ஆலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. கட்டிட வேலைகள், ரிப்பேர் வேலைகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளுக்கு 50 பேருக்கும், இறுதிச் சடங்குக்கு 20 பேருக்கும் மட்டுமே அனுமதி உண்டு.

கர்நாடாகவில் திடீரென்று பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதாக தகவல்கள் வருகிறது.