குரூப் வீடியோ அழைப்புகளுக்காக டெலிகிராம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி! அசத்தல் ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தமது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான தகவல்களைத் தரவும், கட்டுப்பாடுகள், ஆலோசனைகளை விவாதிக்கவும் வீடியோ கால் மூலம் விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஜூம், வாட்ஸ் அப், ஸ்கைப் என பலதரப்பட்ட சமூக வலைதள செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இவைகளில் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்தக் குறைகளைக் களைந்து டெலிகிராம் காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ப்ளே
 

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தமது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான தகவல்களைத் தரவும், கட்டுப்பாடுகள், ஆலோசனைகளை விவாதிக்கவும் வீடியோ கால் மூலம் விவாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஜூம், வாட்ஸ் அப், ஸ்கைப் என பலதரப்பட்ட சமூக வலைதள செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இவைகளில் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்தக் குறைகளைக் களைந்து டெலிகிராம் காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ப்ளே ஸ்டோர் மூலமாக இந்தச் செயலியைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2020 இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேக செயலிகள் வலைதளத்தில் இருந்தாலும் பயனர்களுக்கு எளிமையாக பயன்படுத்தக்கூடியதாகவும், அதிகப்படியான பாதுகாப்பினை அளிப்பதாகவும் இந்த ஆப் தயார் செய்யப்படுகிறது.

டெலிகிராம் செயலியில் ஒவ்வொரு நாளும் 15 லட்சம் புதிய பயனர்கள் இணைகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் கருத்தில் கொண்டு விரைவில் அசத்தலாக ஆரம்பமாகப் போகிறது டெலிகிராமின் புது செயலி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com