புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்ன செஞ்சீங்க? கிடுக்கிப்பிடி போடும் உச்சநீதிமன்றம்!1

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வழியில் விபத்திலும் நோயிலும் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ரயில் வசதிகள் செய்யப்பட்டுத் தரப்படும் நிலையிலும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்களை உணர்ந்துள்ள உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு
 

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வழியில் விபத்திலும் நோயிலும் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ரயில் வசதிகள் செய்யப்பட்டுத் தரப்படும் நிலையிலும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்களை உணர்ந்துள்ள உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களை இலவசமாக மத்திய அரசும், மாநில அரசுளும் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்ட்டுள்ளனர்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்கள் பதில்களை மே 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுவார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com