ரஃபேல் வழக்கு : 4 வார அவகாசம் முடியாது 4 நாளில் மனு தாக்கல் செய்யுங்க.. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: ரஃபேல் விமான வழக்கில் மறு சீராய்வு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் நடந்தது. இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை சாட்சியாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது. மத்திய அரசு சார்பில் மேலும் 4 வார அவகாசம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. 4 வார அவகாசம் தர இயலாது, வரும் சனிக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள்
 
டெல்லி: ரஃபேல் விமான வழக்கில் மறு சீராய்வு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் நடந்தது. இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை சாட்சியாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது.
 
மத்திய அரசு சார்பில் மேலும் 4 வார அவகாசம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. 4 வார அவகாசம் தர இயலாது, வரும் சனிக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
 
4வார அவகாசத்திற்குள் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விடும் என்பதால், அப்படி கேட்கப்பட்டாதா என்று தெரியவில்லை. ஆனால், இந்த வாரமே பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
 
ஏற்கனவே மனுதாரர்களின் வழக்கையும், இணைக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களையும் நீதிபதிகள் முழுமையாக படித்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், அரசின் பதில் மனுவை ஆராய்ந்து விரைவில் தீர்ப்பு வழங்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
 
நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், நீதிபதிகளின் கறார் நடவடிக்கைகள், விரைவில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அடுத்த கட்ட தேர்தல்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே சூசகமாகத் தெரிகிறது.
 
– வணக்கம் இந்தியா