‘தேர்தல் பத்திரம்’… மே 30ம் தேதிக்குள் விவரங்கள் வேண்டும்! – அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கூறி பாஜக அரசு ‘தேர்தல் பத்திரம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் எந்தகட்சிக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விவரம் வெளியே தெரியாது, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தனியார் தொண்டு அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா
 

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கூறி பாஜக அரசு ‘தேர்தல் பத்திரம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் எந்தகட்சிக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விவரம் வெளியே தெரியாது, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தனியார் தொண்டு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, அரசியல் கட்சிகள், யார் யாரிடமிருந்து எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளார்கள் என்ற விவரங்களை மூடிய உறைக்குள் இட்டு நீதிமன்றத்தில் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். 95 சதவீத தேர்தல் பத்திரங்களை பாஜக தான் வாங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் மூலம் பாஜகவுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்குமான தொடர்பு வெளிவரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக செய்திப் பிரிவின் தலைவர் அனில் பலுனி, “ நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றே பாஜக தரப்பில் செயல்பட்டு வருகிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம்,” என்று கூறியுள்ளார்.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உச்சநீதிமன்றம் நன்கொடை விவரங்களை வெளியிடுமா அல்லது தேர்தல் பத்திரத்தை தடை செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

– வணக்கம் இந்தியா