சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி !!
இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தி வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி 3 மணி நேரத்திற்கும் மேலாக கலந்து கொண்டார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.