சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி..!

 

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக இன்று புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2011-ல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. 2013-ல் லோக்பால் ஊழல் தடுப்பு சட்டம் இயற்றுவதற்கான காரணகர்த்தாக இருந்தவர். சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார்.

இவர் புனேவில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள மராட்டிய மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் 84 வயதான அன்னா ஹசாரேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹசாரேவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அவ்துத் போதம்வாட் கூறியுள்ளார்.