மகாத்மா காந்தி விபத்தில் இறந்தாரா? சர்ச்சையை ஏற்படுத்தும் புத்தகம்!!

தேச தந்தை மகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசுப்பள்ளி கையேட்டில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி, காந்தியின் போதனைகள் மற்றும் அவருக்கு ஒடிசா மாநிலத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து தேசப்பிதா என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களை கொண்ட ஒரு கையேட்டை அம்மாநில அரசு வெளியிட்டது. மகாத்மா காந்தியை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த
 

தேச தந்தை மகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசுப்பள்ளி கையேட்டில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி, காந்தியின் போதனைகள் மற்றும் அவருக்கு ஒடிசா மாநிலத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து தேசப்பிதா என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களை கொண்ட ஒரு கையேட்டை அம்மாநில அரசு வெளியிட்டது.

மகாத்மா காந்தியை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கையேடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. அந்த கையேட்டில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்ததாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்கு பின் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடுகள் திரும்பபெறப்பட்டுவருவதாகவும், இந்த பிழைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சமிர் ரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார்.

https://www.A1TamilNews.com