கல்வி உதவித் தொகை விவகாரம்! கேரள உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

 

திறமை மற்றும் ஏழ்மை அடிப்படையில் கேரளா மாநில அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 2011  மார்க்சிஸ்ட் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆட்சிமுடியும்போது  சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு தந்தார். சமூக பொருளாதார கல்வி அடிப்படையில் முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளனர் என ராஜிந்தர் சச்சார் கமிட்டி அறிக்கை தந்தது. அடுத்து பலோலி  கமிட்டி அறிக்கை கிறிஸ்தவர்களும் அதேபோல் பின்தங்கி உள்ளனர் என அறிக்கை தந்தது. 2015 ல்  இந்த கல்வி உதவித்தொகை  80 % முஸ்லிம் 20 % கிறிஸ்தவ மாணவர்களுக்கு என மாற்றப்பட்டது.

கேரள அரசின் இந்த உத்தரவுகள் அரசியல் சாசன மதச்சார்பின்மை சமத்துவம் இவைகளுக்கு எதிராக உள்ளது. என வழக்கறிஞர் ராஜு ஜோசப் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். மே 28 அன்று கேரள உயர்நீதிமன்றம்  இந்த கல்வி உதவித்தொகை  இடஒதுக்கீடு விகிதாசாரத்தை  ரத்து செய்தது.  முஸ்லீம் மாணவர்களுக்கு 58 . 67 % ,லத்தீன்  கிறிஸ்தவ மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ  மாணவர்களுக்கு 40 .6 % மற்றும் சீக்கியர் பவுத்தர் ஜெயின்  பார்சி  மாணவர்களுக்கு 0  73 %   என சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.  மார்க்சிஸ்ட் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.  

இதே உயர்நீதிமன்றம் தான் லட்சத்தீவுகள் நிர்வாகி அவசரக்கோலத்தில்  அறிவித்த மாட்டிறைச்சிக்கு தடை உத்தரவுக்கும் இடைக்கால தடை பிறப்பித்தது   என்பதும் குறிப்பிடத்தக்கது.

-வி,எச்,கே. ஹரிஹரன்