கிரண் பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டார் முதல்வர் நாராயணசாமி… அடுத்து என்ன நடக்கும்? பரபரப்பில் புதுவை!

புதுச்சேரி: புதுவையில் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அறிவித்தார். அவரது அறிவிப்பு கடந்த 11–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவினால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். உடனே அபராதம் கூடாது என்று, முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 

புதுச்சேரி: புதுவையில் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அறிவித்தார். அவரது அறிவிப்பு கடந்த 11–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவினால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். 

தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். உடனே அபராதம் கூடாது என்று, முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாகவும், 30 நலத்திட்டங்களுக்கு கிரண்பேடி இன்னும் ஒப்புதல் வழங்காதது நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கும் பொதுமக்கள், முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். 

துணை நிலை ஆளுநரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகக் குற்றம்சாட்டிய நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆளுநர் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் கழுத்தில் கருப்பு துண்டு அணிந்தும் வந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு கிரண்பெடி ஒப்புதல் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என நாராயணசாமி கூறியுள்ளார்.

கிரண்பேடி இன்று மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகையை விட்டு வெளியில் செல்ல வேண்டும். ஆனால் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டம் தொடர்வதால், எப்படி வெளியேறுவார் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான காங்கிரஸ், திமுக தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு தொடர்கிறது.

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் ஆளுநர் மாளிகைக்குமுன் தர்ணாவில் அமர்ந்த ஒரே முதல்வர் நாராயணசாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா