தூய்மை இந்தியா… கூகுள் வரைபடத்தில் தெரியும் கழிப்பிடங்கள்!

டெல்லி: கூகுள் வரைபடத்தில் இனி பொதுக் கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் என கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கூகுள் வரைபடத்தில் பொதுக் கழிப்பிடங்களை பட்டியலிடும் திட்டம் டெல்லி, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் 2016 ஆம் ஆண்டு சோதனையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
 

டெல்லி: கூகுள் வரைபடத்தில் இனி பொதுக் கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் என கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கூகுள் வரைபடத்தில் பொதுக் கழிப்பிடங்களை பட்டியலிடும் திட்டம் டெல்லி, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் 2016 ஆம் ஆண்டு சோதனையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. மேலும் கூகுள் வரைப்படத்தில் PUBLIC TOILETS NEAR ME என டைப் செய்தால் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் எனவும் கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

– வணக்கம் இந்தியா