தமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது!

இந்தியா முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் 11 ரயில்கள் தனியார் வசம் போக இருக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்குமாக 11 ரயில்கள் தனியார் வசம் செல்ல உள்ளது. இந்த தனியார் ரயில்களின் கட்டணங்களை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளவும்
 

ந்தியா முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் 11 ரயில்கள் தனியார் வசம் போக இருக்கிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்குமாக 11 ரயில்கள் தனியார் வசம் செல்ல உள்ளது.

இந்த தனியார் ரயில்களின் கட்டணங்களை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளவும் மத்திய அரசு அனுமதிக்கிறது. பயணிகளின் எண்ணிக்கைக்குக் தகுந்தவாறு, விமான கட்டணத்தைப் போல் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வசூலிக்கப்படும். இதனால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும்.

தனியார் ரயில்களுக்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்து நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாமானிய மக்கள் ரயில்களில் செல்லும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.A1TamilNews.com