அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் மருத்துவமனைகள்!’ முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை தடுக்கவும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவைப் பொறுத்த வரை முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற அனைத்தும் அரசின்
 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதை தடுக்கவும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆந்திராவைப் பொறுத்த வரை முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற அனைத்தும் அரசின் கீழ் கொண்டுவரப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே. ஆனால் மேலும் உயரக்கூடும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. `ஆந்திராவின் சுகாதார மற்றும் மருத்துவத்துறையின் சிறப்புத் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசுக்கு உதவ வேண்டும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவமனைகள் வெளி நோயாளிகள் சேவைகளை நிறுத்தி தங்கள் சேவை முழுவதையும் வைரஸ் தொற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலரும் இந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவல் வேகத்தைப் பொறுத்து தேவைப்பட்டால் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள், விடுதிகள் என அனைத்தும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படும் எனவும் முதல்வர் தம் குறிப்பில் வெளியிட்டிருந்தார்.

கொரானோவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவிலேயே தனியார் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த முதல் மாநிலம் ஆந்திரா மட்டுமே என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

A1TamilNews.com