கொரோனா வைரஸ்.. சீனாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரதமர் மோடி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-க்கு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், துரதிர்ஷ்டவசமாக இந்த நோய் தாக்குதல் மூலம் மரணமடைந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவிப்பதோடு, இதை எதிர்த்துப் போராடுவதற்கான உதவி வழங்க முன்வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சீனாவின் யுகான் பகுதியிலிருந்து 640 இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான அனைத்து உதவிகளுக்கும் பிரதமர் மோடி சீன
 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-க்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், துரதிர்ஷ்டவசமாக இந்த நோய் தாக்குதல் மூலம் மரணமடைந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவிப்பதோடு, இதை எதிர்த்துப் போராடுவதற்கான உதவி வழங்க முன்வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சீனாவின் யுகான் பகுதியிலிருந்து  640 இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான அனைத்து உதவிகளுக்கும் பிரதமர் மோடி சீன அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இது வரையிலும் 810 பேர் பலியாகியுள்ளனர். 2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலில் சீனா உட்பட 26 நாடுகள் பாதிப்படைந்தன. தற்போதைய உயர்ப்பலிகள் சார்ஸ் வைரஸை விட அதிகமாகி விட்டதாகத் தெரிகிறது.

https://www.A1TamilNews.com