கனஜோராக களமிறங்கும் பதஞ்சலி நிறுவனம்! ஐபிஎல் போட்டிகளின்   டைட்டில் ஸ்பான்ஸர் யோகம்!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. சீனாவின் சில்மிஷம் காரணமாக மொபைல் ஆப்களுக்கு மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளிலும் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக் கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான விவோ தெரிவித்துள்ளது. விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் “தி எகானமிக் டைம்ஸ்” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “ஐபிஎல்
 

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதத்தில்  ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. சீனாவின் சில்மிஷம் காரணமாக மொபைல் ஆப்களுக்கு மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளிலும் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள்  வெளியாகின.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக் கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான விவோ தெரிவித்துள்ளது.
விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் “தி எகானமிக் டைம்ஸ்” நாளிதழுக்கு அளித்த  பேட்டியில் “ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி ஏற்கெனவே பைஜூஸ், கொகோ கோலா, ஜியோ, ட்ரீம் 1 1, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம்  ஆகிய நிறுவனங்களுடன் பதஞ்சலியும் களத்தில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

A1TamilNews.com