ஒலி ஒளி மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியாது – ப.சிதம்பரம்!

ஊரடங்கு மட்டும் போதாது மிக அதிகமாக மிகப்பரவலான சோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நேற்றிரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுமாறு பிரதமர் கூறியதை ஏற்று நாடெங்கிலும் பொதுமக்களும், பிரபலங்களும் விளக்கு ஏற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , “பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம். ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க
 

ரடங்கு மட்டும் போதாது மிக அதிகமாக மிகப்பரவலான சோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நேற்றிரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுமாறு பிரதமர் கூறியதை ஏற்று நாடெங்கிலும் பொதுமக்களும், பிரபலங்களும் விளக்கு ஏற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , “பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம். ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

ஊரடங்கு மட்டும் போதாது. மிக அதிகமாக மிகப் பரவலாக சோதனை (Testing) செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஊரடங்கு + சோதனை தாம் நல்ல விளைவுகளைத் தரும் என்று ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன,” என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை முற்றிலுமாக புறக்கணித்த மத்திய அரசு, தற்போது பாராளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களுக்கு மேலாக உள்ள கட்சியினரிடம் பேசுவதற்கு முன் வந்துள்ளது. இந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்களுடன், கொரோனா விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச முன்வந்துள்ளார்.

A1TamilNews.com