ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து !! விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. மே 25ம்தேதி முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் சர்வதேச
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த   இந்தியா முழுவதும்  மார்ச் மாதம் முதல்  தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.  மே 25ம்தேதி முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டது.

ஆனால் இன்னும் சர்வதேச விமான சேவை தொடங்கப்படவில்லை. தற்போது அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 31ம்தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

வந்தே பாரத்  திட்டத்தின் மூலம்  வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com