வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்! பயனாளர்கள் உற்சாகம்!

தொழில்நுட்ப உலகில் அநேக சமூக வலைதளங்கள் இருந்தாலும் மக்களின் ஆதரவை அதிக அளவு பெற்றிருப்பதில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் , டிக்டாக் செயலிகளே.அதிலும் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கேற்ப குறுந்தகவல்களை அனுப்புவதில் முன்னோடியாக இருக்கிறது வாட்ஸ் அப் செயலி. இதன் பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாட்ஸ் அப்பில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் பதிப்புகளில் இருந்தாலும் வாட்ஸ்
 

தொழில்நுட்ப உலகில் அநேக சமூக வலைதளங்கள் இருந்தாலும் மக்களின் ஆதரவை அதிக அளவு பெற்றிருப்பதில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் , டிக்டாக் செயலிகளே.அதிலும் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.

வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கேற்ப குறுந்தகவல்களை அனுப்புவதில் முன்னோடியாக இருக்கிறது வாட்ஸ் அப் செயலி. இதன் பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாட்ஸ் அப்பில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் பதிப்புகளில் இருந்தாலும் வாட்ஸ் ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளை வாட்ஸ் அப் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

உங்களது டார்க் மோர்டில் செய்திகளை அனுப்பும் சாட்டிங் திரை கருப்பு நிறத்திலும், குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்திலும் இருக்கும். பீட்டா வெர்ஷனில் செயல்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த டார்க் மோட் அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் விரைவில் செயல்படத் துவங்கும்.

மொபைலில் டார்க் மோட் வசதியைப் பெற Settingsல் உள்ள தீம் பகுதியில் டார்க் என்பதனைக் க்ளிக் செய்து இந்த வசதியை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

A1TamilNews.com