அரசியல் சாசனத்தின் இந்தப் பிரிவை பயன்படுத்தலாமே! செய்வாரா குடியரசுத் தலைவர்?

 

உயர்நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும்  57 லட்சம் வழக்குப்பட்டியல் கட்டு அறுந்து தெறிந்துவிடாமல் இருக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை  2 அல்லது  3 ஆண்டுகளுக்கு மட்டும்   மீள்நியமனம் செய்ய ஒருபழைய சட்டம் உள்ளது. மிக அபூர்வமாக பயன்படுத்தப்படும் இந்த 224 ஏ பிரிவு அரசியல் சாசனம்.

ஓய்வு பெற்ற  நீதிபதியை  அதே நீதிமன்றத்திலோ வேறு மாநில உயர்நீதி மன்றத்திலோ  தேங்கியுள்ள வழக்குகளை விசாரிக்க ஜனாதிபதி மீள்நியமனம் செய்ய அதிகாரம் தருகிறது. இந்த தற்காலிக நீதிபதிகளின் பதவிக்காலம், சம்பளம் இதர படிகள், வழக்கமுடிப்பதில் அவர்களின் பங்கு இவை பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ்.ஏ. பாப்டே ,நீதிபதிகள் எஸ்.கே.கவுல் ,சூர்யகாந்த்  கொண்ட பெஞ்ச் , வழிகாட்டி நெறிகளை அறிவித்துள்ளது.   

மக்களும் சில நெறிகளை அனுசரிக்க வேண்டும்.கணக்கில்லா வாய்தாக்கள் தரக்கூடாது.வாதங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கறிஞர் தாக்கல் செய்யும் வக்காலத்துக்கு வாதி/ பிரதிவாதி பொறுப்பாக வேண்டும். ஒரேயொரு குறுக்கு விசாரணை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வக்கீல் கேட்ட வாய்தாவுக்கு கட்சிக்காரர் ஆஜர் ஆகாவிட்டாலும் விசாரணை நடத்த வேண்டும்.  மரணம், தொற்று நோய் காரணம் மட்டுமே ஏற்க வேண்டும். எல்லா வழக்கு விசாரணை அறிவிப்புடன், தீர்ப்பு நாளையும் அறிவித்து விடவேண்டும். அப்போது தான் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் நம்புவர்.

-வி.எச்.கே. ஹரிஹரன்