விஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

ஆந்திராவில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் மே 7ம் தேதி திடீரென விஷவாயு கசிந்து 12 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் பலர் சுவாசப்பை, தோல் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த நிறவனத்தை உடனடியாக மூட போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சம்பவத்தை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க 5 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்திருந்தது.பல்வேறு தரப்பட்ட தரப்புக்களில் நடத்தப்பட்ட
 

ந்திராவில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் மே 7ம் தேதி திடீரென விஷவாயு கசிந்து 12 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்னும் பலர் சுவாசப்பை, தோல் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த நிறவனத்தை உடனடியாக மூட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த சம்பவத்தை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க 5 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்திருந்தது.பல்வேறு தரப்பட்ட தரப்புக்களில் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் மட்டுமே விஷவாயு கசிவு சம்பவம் நடந்திருக்கிறது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷ வாயு தாக்கி 12 பேர் உயிரிழந்ததற்கும், சுற்றுப் பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் மாசடைந்ததற்கும், அப்பகுதி பொதுமக்களின் உடல் நலக் குறைபாடுகளுக்கும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனமே முழு பொறுப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனத்திடம் பெறப்பட்ட ரூ.50 கோடி தற்காலிக அபராத தொகை மட்டுமே. மறுபடியும் சுற்றுச்சூழல் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஆகிய துறைகள் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னரே இறுதிகட்ட அபராதத் தொகையை முடிவு செய்யப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com