ரூ.98 பிளானை நீக்கியது ஜியோ! இனி ரூ.129 முதல் அசத்தல் ரீசார்ஜ் பிளான்கள்!
ஆனால் தற்போது சிறிது, சிறிதாக சலுகைகளை குறைத்து வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஜியோ ரூ.98 ல் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கி வந்தது. இதனுடன் 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள் என மற்ற நெட்வொர்க்குகளுக்கு சவால் விடும் வகையில் இருந்து வந்தது.
ரூ98க்கு பிளானை அப்படியே ரூ.129ஆக உயர்த்தியுள்ளது. அதே போல் 28 நாட்கள் வேலிடிட்டி , 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் இலவசம், மற்ற மொபைல் நெட்வொர்க்களுக்கு 1000 நிமிடங்கள் ஆஃபரும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.