அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கே அரசு வேலை! கல்வி அமைச்சர் அதிரடி!!

இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. . மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹதோ இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலைகள் கொடுக்கப்பட்ட வேண்டும் தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் வருவதில் நியாயம் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் ஜகர்நாத். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வியை மேம்படுத்த இது போன்ற அதிரடி
 

இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  .

மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹதோ இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலைகள் கொடுக்கப்பட்ட வேண்டும் தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் வருவதில் நியாயம் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் ஜகர்நாத்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வியை மேம்படுத்த இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் கட்டாயம் தேவை என்று தெரிவித்த அமைச்சர், இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறிய அமைச்சர், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்குத் தான் அரசு வேலை என்ற அதிரடி நடவடிக்கையை ஜார்க்கண்ட் அரசு கையில் எடுத்துள்ளார்கள். 
 
தமிழக முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் கவனிப்பார்களா?