இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு வருகிறதா?டிராய் நேரடி ரிப்போர்ட்!

இந்தியாவில் மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்திலிருந்தே 10 இலக்க மொபைல் எண்கள் தான் உபயோகத்தில் உள்ளன. சென்ற வாரத்தில் இந்தியாவில் உள்ள மொபைல் எண்கள் 11 இலக்க எண்ணாக மாற்றப்படப் போவதாகவும், மொபைல் எண்களுக்கு முன்னால் 0 சேர்த்து இனி உபயோகிக்க வேண்டும் என்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் இந்தச் செய்தி குறித்து டிராயிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது தற்போதைக்கு மொபைல் எண்களை மாற்றும் வாய்ப்பு இல்லை எனவும், இந்தத் தகவல்
 

ந்தியாவில் மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்திலிருந்தே 10 இலக்க மொபைல் எண்கள் தான் உபயோகத்தில் உள்ளன.

சென்ற வாரத்தில் இந்தியாவில் உள்ள மொபைல் எண்கள் 11 இலக்க எண்ணாக மாற்றப்படப் போவதாகவும், மொபைல் எண்களுக்கு முன்னால் 0 சேர்த்து இனி உபயோகிக்க வேண்டும் என்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் இந்தச் செய்தி குறித்து டிராயிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது தற்போதைக்கு மொபைல் எண்களை மாற்றும் வாய்ப்பு இல்லை எனவும், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே உபயோகப்படுத்தில் இருக்கும் அதே எண்களே தொடரும் என்றும் டிராய் அறிவித்துள்ளது.

A1TamilNews.com