புதுச்சேரியில் கிரண் பேடிக்கு தடை!

மதுரை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை ஆளுநர் கிரண் பேடிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாக நடவடிக்கைகளில் செயல்படவிடாமல் தடுக்கிறார். மத்திய அரசு அளித்துள்ள அதிகாரங்களைக் காட்டி, கோப்புகளில் பார்வையிட்டு அவரே கையெழுத்திடுகிறார் என்று புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை செய்த நீதிபதி மகாதேவன், “முதலைமச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களிலும் தலையிடவோ , கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு
 
மதுரை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை ஆளுநர் 
 
கிரண் பேடிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாக நடவடிக்கைகளில் செயல்படவிடாமல் தடுக்கிறார். மத்திய அரசு அளித்துள்ள அதிகாரங்களைக் காட்டி, கோப்புகளில் பார்வையிட்டு அவரே கையெழுத்திடுகிறார் என்று புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
விசாரணை செய்த நீதிபதி மகாதேவன்,  “முதலைமச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களிலும்  தலையிடவோ , கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை,” என்று உத்தரவிட்டார்
 
யூனியன் பிரதேச அலுவல்களில் தலையிடும் உரிமை துணை ஆளுநருக்கு உண்டு என்ற மத்திய் அரசின் அறிவிப்பையும் நீதிபதி ரத்து செய்தார்.
 
அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு இருந்ததை லட்சுமி நாராயணன் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார். அவர் சார்பில் முத்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம், வேணுகோபால் , சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்கள்.
 
– வணக்கம் இந்தியா