அரசு ஊழியர்களுக்கு ‘ஆரோக்கிய சேது’ கட்டாயம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் ஆரோக்கிய சேது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் ஆரோக்கிய சேது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்தச் செயலியின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஆரோக்கிய சேது செயலி மூலம், அப்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

அலுவலகம் செல்லும் வழியில் கொரோனாத் தொற்று அதிகம் காணப்பட்டால் அலுவலகம் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் அரசாங்கம் சுற்றறிக்கை மூலம் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

A1TamilNews.com