திருடுபோன காரை கண்டுபிடிக்க உதவிய ‘ஃபாஸ்ட்டேக்’

புனேவில் திருடு போன காரை ஃபாஸ்ட்டேக் முறையை பயன்படுத்தி எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வாகனங்களுக்கான மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்ட்டேக் முறை ஜனவரி 15ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடி கடக்கும் போது, பணம் மின்னணு முறையில் கட்டணத்தை பிடித்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புனேவில் உள்ள கர்வெநகர்(karvenagar) என்ற இடத்தில் வசிக்கும் ராஜேந்திர ஜக்தேப் (rajendra jagtap) என்பவரின் செல்போனிற்கு அதிகாலை 4.30 மற்றும் 5.50 மணிக்கு
 

புனேவில் திருடு போன காரை ஃபாஸ்ட்டேக் முறையை பயன்படுத்தி எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் வாகனங்களுக்கான மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்ட்டேக் முறை ஜனவரி 15ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடி கடக்கும் போது, பணம் மின்னணு முறையில் கட்டணத்தை பிடித்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புனேவில் உள்ள கர்வெநகர்(karvenagar) என்ற இடத்தில் வசிக்கும் ராஜேந்திர ஜக்தேப் (rajendra jagtap) என்பவரின் செல்போனிற்கு அதிகாலை 4.30 மற்றும் 5.50 மணிக்கு பாஸ்ட்டேக் மூலம் பணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜக்தேப், வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது SUV-கார் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பாஸ்ட்டேக் மூலம் கடைசியாக கட்டணம் செலுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளையும், அதன் மூலம் கார் செல்லும் வழியை ஜிபிஎஸ் வசதியுடன் காவல்துறையினர் தேடினர்.

பின்னர், தானே என்ற இடத்தில் கார் நிற்பதை காவல்துறையினர் கண்டறிந்து மீட்டனர். காரின் உரிமையாளர் ஜக்தேப்பிடம் ஒப்படைத்த காவல்துறையினர், காரை திருடிச் சென்ற 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

https://www.A1TamilNews.com