சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு! அதிர்ச்சிக் காரணம்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இதனால் தொடங்கப்பட்ட ரயில் சேவையின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல மாநில அரசுகளும் ஏற்கனவே இருப்பவர்களை பரிசோதனை செய்து முடிக்காத நிலையில் புதிதாக ஊர் திரும்புபவர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. அவர்கள் அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்
 

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளது.

இதனால் தொடங்கப்பட்ட ரயில் சேவையின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல மாநில அரசுகளும் ஏற்கனவே இருப்பவர்களை பரிசோதனை செய்து முடிக்காத நிலையில் புதிதாக ஊர் திரும்புபவர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

அவர்கள் அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அந்தந்த மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. பீகார் மாநில அரசு வெளிமாநிலங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறைகளை வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

அம்மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

A1TamilNews.com