புதிய கல்விக் கொள்கை !! வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி மையங்கள் திறக்க அனுமதி

இந்தியாவில் கடந்த 34 ஆண்டுகளாக ஒரே கல்வி முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதை மேம்படுத்தும் பொருட்டும், அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஒருங்கிணைக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 24.8 கோடி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்வித்தரம் காரணமாக தனியார் பள்ளிகளிலேயே படித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதன்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில்
 

இந்தியாவில்  கடந்த 34 ஆண்டுகளாக ஒரே கல்வி முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதை மேம்படுத்தும் பொருட்டும், அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஒருங்கிணைக்கும் வகையிலும்  மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது.

இந்தியாவில்  உள்ள 24.8 கோடி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்  கல்வித்தரம் காரணமாக தனியார் பள்ளிகளிலேயே படித்து வருகின்றனர்.  இந்நிலையில் மத்திய அரசு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது.  

அதன்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள்  இந்தியாவில் தங்கள் கல்வி மையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்றல் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

அத்துடன் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் கட்டாயப் பாடமாக்கபட்டுள்ளது.  வரும் 2035 ஆம் வருடத்துக்குள் உயர்நிலைப் பள்ளிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

A1TamilNews.com