தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர்.

எனினும் இருவரும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு செப்டம்பர் 22-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் அக்டோபர் 4-ம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஏற்கனவே காலியாக இருந்த 1 இடத்திற்கு தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.