‘டிஜிட்டல் இந்தியா’வின் புகைப்படம் கிடைத்து விட்டதா?

சென்னை : தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாரதீய ஜனதா கட்சியை வறுத்து எடுத்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ வை கேலி செய்து ஒரு படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கும் சாலையை படம் பிடித்து அதில் “டிஜிட்டல் இந்தியாவுக்கான சிறந்த படம் தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது” என்ற வாசகத்தையும் பரப்பி வருகிறார்கள். படத்தில் என்ன விசேஷம் என்றால் சாலையில் பள்ளம்
 

சென்னை : தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாரதீய ஜனதா கட்சியை வறுத்து எடுத்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ வை கேலி செய்து ஒரு படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மழை நீர் தேங்கி நிற்கும் சாலையை படம் பிடித்து அதில் “டிஜிட்டல் இந்தியாவுக்கான சிறந்த படம் தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது” என்ற வாசகத்தையும் பரப்பி வருகிறார்கள்.

படத்தில் என்ன விசேஷம் என்றால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கி இருக்கும் பகுதி இந்தியாவின் வரைபடத்தின் சாயலில் உள்ளது. இயற்கையாகவே அந்த இடம் அப்படி இருந்ததா? அல்லது போட்டோஷாப் மூலம் போட்டோஷாப் போலி விளம்பரங்களுக்கு பதிலடி கொடுக்கிறார்களா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

இப்பல்லாம் போட்டோஷாப் கூட தத்ரூபமா நிழல் முதற்கொண்டு சேர்த்து தத்ரூபமா பண்ணுறாங்கதானே!

– வணக்கம் இந்தியா