கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

 

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தொற்று பரவல் குறைந்து உள்ளதையடுத்து, அங்கு தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், சந்தைகள் சில கட்டுப்பாடுகள் செய்ல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பிறகு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளது” என்றார்.

மேலும்,  கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன்கள் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்திரபிரசதா கேஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பேசியுள்ளோம். புதிய வகை தொற்று பாதிப்பை கண்டறிய மரபணு வரிசையை கண்டறியும் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது” என்றார்.