வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு செய்யத் தவறிய அரசுகள்! உத்தரவுகள் பிறப்பிக்கும் நீதிமன்றங்கள்!!

புலம் பெயர் தொழிலாளர் களுக்கு தமிழகஅரசு மாளிகைப்பொருட்கள் மற்றும் ரூ 1000 வழங்கியது. பதிவுபெறாத பலருக்கு மாநிலஅரசின் உதவி கிடைக்கவில்லை. இதுபற்றி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசை கடுமையாக கண்டித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு பயன்படுத்திவிட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்புடையதுஅல்ல. கேரளாவை விட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மறுக்கிறார்கள். தமிழகத்தில் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடு. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது வெறும் பேச்சில் மட்டும்
 

புலம் பெயர் தொழிலாளர் களுக்கு  தமிழகஅரசு மாளிகைப்பொருட்கள் மற்றும் ரூ 1000  வழங்கியது. பதிவுபெறாத பலருக்கு மாநிலஅரசின் உதவி கிடைக்கவில்லை. இதுபற்றி தாக்கல்  செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக  அரசை கடுமையாக கண்டித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு பயன்படுத்திவிட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்புடையதுஅல்ல. கேரளாவை  விட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மறுக்கிறார்கள்.  தமிழகத்தில் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடு.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது வெறும் பேச்சில் மட்டும் தானா? புலம்பெயர் தொழிலாளர் பதிவுசெய்வதற்கான நடைமுறை, எதிர்காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்  குறித்து  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜூனில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் பசியால் தன தாய் இறந்துவிட்டதை அறியாத ஒரு குழந்தை அவரை எழுப்ப முயன்றது போன்ற ஒருபுகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இது தொடர்பான செய்தியை உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. ஒருமாநிலத்தில் இருந்து  தொழிலாளர்களை அனுப்பி வைத்தால் மற்றொரு மாநிலஅரசு அவர்களை அனுமதிக்க மறுக்கிறது. நம்நாட்டில் இடைத்தரகர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். புலம்பெயர் தொழிலாளர் விஷயத்தில் இடைத்தரகர் இருப்பதை இந்த கோர்ட் விரும்பவில்லை.

உணவு சேமிப்பு கிடங்குகளில் அதிகமாக உள்ள உணவுப்பொருட்களை இவர்களுக்கு விநியோகிக்க முடியுமா?முகாம்களில் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.ரயில் கட்டணச்செலவை மாநிலஅரசுகளே பகிர்ந்து கொள்ளவேண்டும். சிறப்பு ரயில்  எந்த மாநிலத்தில் இருந்து புறப்படுகிறதோ அங்கு அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர்  அந்த மாநிலஅரசே வழங்கவேண்டும்.

நடைபயணமாக  சொந்தமாநிலங்களுக்கு செல்பவர்களை முகாம்களுக்கு அழைத்து சென்று தங்கவைத்து  பிறகு பஸ் ரயில்களில்  அனுப்பிவைக்கவேண்டும். என உச்சநீதிமன்றம் நச் என தெளிவாக அழுத்தம்திருத்தமாக உத்தரவு பிறப்பித்துவிட்டுள்ளது. 

இதுவரை 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தமாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் எதிர்மறையான தகவல்களை பரப்புகின்றனர். இவர்கள் பேரழிவின் தூதர்களாக செயல்படுகின்றனர். தொழிலாளர்களுக்கு உதவ  ஏசி அறையில் இருந்து அவர்கள் வெளியில் வரலாமே என சொலிசிட்டர் ஜெனரல் துஷாரமேத்தா  தெரிவித்தார்.

 கட்டண பிரச்னைக்கு உச்சநீதிமன்றம்  தீர்வு கூறிவிட்டது, இனி மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற தவிக்கும் பிறமாநில தொழிலாளர்களை உரிய மரியாதையுடன் அனுப்பி வைப்பது தான் நாகரிகம். மண்ணின் மைந்தருக்கேவேலை என்று கோஷமிட்டவர்கள் பணிக்காலியிடங்களுக்கு தகுதியான உள்மாநில தொழிலாளர்களை அனுப்பிவைக்க அருமையான வாய்ப்பு.

– வி.எச்.கே.ஹரிஹரன்

A1TamilNews.com