வரும் காலங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்... டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 

இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு கூறியதாவது, “வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்.

அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும். மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை, இதுதான் நிதர்சனமமோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தது.