இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது!மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்!

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகளும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உலக அளவில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் மக்கள் தொகை
 

ந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகளும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உலக அளவில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.

உலக அளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி பார்த்தால் 10 லட்சம் மக்களில் 538 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இது 10 லட்சம் மக்களுக்கு 1,453 என்று உள்ளது.

அதன்படி பார்த்தால் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் அதிகப்படியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலும், மக்கள் தொகை அதிகம் என்பதால் தொற்று எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார் .

A1TamilNews.com