எந்தக் கேள்விகளையும் தவிர்க்காதவர் பிரணாப் முகர்ஜி!! கனிமொழி எம்.பி. இரங்கல்!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர் என்று கனிமொழி எம்.பி.கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜிக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர். தலைவர் கலைஞருடனான இவரின் ஆழ்ந்த நட்பை நாடே அறியும். நான் எம்.பியாக பணியாற்றிய சமயத்தில், இவரோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மூத்த
 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர் என்று கனிமொழி எம்.பி.கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில்

”முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர்.

தலைவர் கலைஞருடனான இவரின் ஆழ்ந்த நட்பை நாடே அறியும். நான் எம்.பியாக பணியாற்றிய சமயத்தில், இவரோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு மூத்த பாராளுமன்றவாதியாக, பல்வேறு ஆலோசனைகளை கூறி வழிநடத்தியுள்ளார். சிறந்த நிதியமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு என் இரங்கல்,” என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.

A1TamilNews.com