குடியரசு துணை தலைவர் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு

 

குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு அண்மையில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் சென்றதற்கு, சீனா ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கடந்த 9-ம் தேதி அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். குடியரசு துணை தலைவரின் இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்று தெரிவித்துள்ளது. .

மேலும், இந்தியத் தலைவர்கள் வழக்கமாக மற்ற இந்திய மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள். இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பது அர்த்தமற்றது.

லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்தது தான் எனத் தெரிவித்துள்ளது.