சினிமா பாணியில் வாட்ஸ் அப் ஆலோசனை மூலம் பிரசவம்!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநில அரசுகளும் ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. முழு ஊரடங்கு என்பதால் வசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரது நண்பரான மருத்துவர் பிரியங்காவை தொடர்பு கொண்டு அந்த
 

ந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநில அரசுகளும் ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. முழு ஊரடங்கு என்பதால் வசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரது நண்பரான மருத்துவர் பிரியங்காவை தொடர்பு கொண்டு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் கூறிய அறிவுரைகளை பின்பற்றிப் பிரசவம் பார்த்துள்ளனர்.

இந்த பிரசவத்தில் வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் , வீடியோ கால் மூலம் விஜய் பிரசவம் பார்ப்பார் . இதைப் போல் கர்நாடகாவில் , வாட்ஸ்அப் வீடியோ மூலம் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்த இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A1TamilNews.com