மனைவிக்காக அரசு ஊழியர்கள் வங்கிக் கணக்குகளை மாற்றிய ஃபட்னாவிஸ்!

மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2 லட்சம் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவராக இருந்தார். அவருடைய வளர்ச்சிக்காக, அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றி உள்ளார் ஃபட்னாவிஸ். இதன் மூலம் ஆண்டு தோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆக்ஸிஸ் வங்கிக்கு அரசுப் பணத்தின் மூலம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
 

ஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2 லட்சம் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவராக இருந்தார். அவருடைய வளர்ச்சிக்காக, அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றி உள்ளார் ஃபட்னாவிஸ். இதன் மூலம்  ஆண்டு தோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆக்ஸிஸ் வங்கிக்கு அரசுப் பணத்தின் மூலம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அமலாக்கத்துறையில் புகார் அளித்து இருந்தார். மனைவிக்காகவே தனியார் வங்கிக்கு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மஹாராஷ்ட்ரா நிதி அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் இது உண்மைதான் என்றும், மீண்டும் அந்த வங்கிக் கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடந்து வருவதாக கூறியுள்ளார்.இந்த விவகாரம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியார் வங்கிக்கு சாதகமாக செயல்பட்ட ஃபட்னாவிஸ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

– வணக்கம் இந்தியா