இந்தியாவில் 630 விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் விமானப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தெர்மல்
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் விமானப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.
விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும். விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தெர்மல் பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்பது போன்ற நிபந்தனைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தன.

புயல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்கப்பட்டது. முதல் விமானம் டெல்லியில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புனேவுக்கு இயக்கப்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் முதல் விமானம் காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இபாஸ் இருந்தால் மட்டுமே விமானங்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 50 நாட்களுக்கு பிறகான முதல் நாள் விமான சேவையில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பரபரப்பாக இயங்கும் சென்னை, மகாராஷ்டிரா விமான நிலையங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்கள் ஆதலால் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் காணப்பட்டனர்.

A1TamilNews.com